Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தேசிய பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆதரவு
தற்போதைய செய்திகள்

தேசிய பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆதரவு

Share:

பள்ளி மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சு செய்துள்ள பரிந்துரைக்கு தேசிய பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. நாட்டில் ​மீண்டும் கோவிட் 19 தொற்றுக்கு ஆளாகி வருவோரின் எண்ணிக்கைக கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வரும் நிலையிலா ஆர்க்டரஸ் எனும் புதிய தொற்று நாட்டை உலுக்கி வருகிறது.

இந்நிலையில் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சு பரிந்துரைத்து இருப்பது ஒரு சரியான நடவடிக்கையாகும் என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அலி ஹசான் தெரிவித்துள்ளார்.

Related News