Apr 8, 2026
Thisaigal NewsYouTube
ஹார்முஸ் நீரிணைப்பில் சிக்கிய மலேசிய கப்பல்கள் விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

ஹார்முஸ் நீரிணைப்பில் சிக்கிய மலேசிய கப்பல்கள் விடுவிப்பு

Share:

ஹார்முஸ் நீரிணைப்பில் சிக்கியிருந்த மீதமுள்ள 6 மலேசிய கப்பல்களும் படிப்படியாக விடுவிக்கப்படும் என மலேசியாவிற்கான ஈரான் தூதர் வலியொல்லா முகமதி நஸ்ராபாதி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சிக்கியிருந்த 7 கப்பல்களில் ஒன்று விடுவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையிலான உயர்மட்ட ராஜதந்திரப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 முதல் இப்பகுதியில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நட்பு நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பாதையை உறுதி செய்வதாக ஈரான் உறுதியளித்துள்ளது. இதன் மூலம் மலேசிய கப்பல்கள் தங்கள் இலக்கை நோக்கி பயணத்தைத் தொடர அனுமதி கிடைத்துள்ளது.

Related News