Oct 31, 2026
Thisaigal NewsYouTube

சித்தியவானில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பிஎம்டபள்யூ கார் மீது துப்பாக்கிச் சூடு!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சித்தியவானில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பிஎம்டபள்யூ கார் மீது துப்பாக்கிச் சூடு!

பேராக், சித்தியவானில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பிஎம்டபள்யூ கார் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுத் தப்பினர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.16 மணியளவில் கம்போங் கோ, தாமான் ஹிஜாவ் பகுதியில் நிகழ்ந்ததாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

காரின் உரிமையாளர் வீட்டுக்குள் இருந்தபோது பலத்த சத்தம் கேட்டுள்ளது. காலை 9 மணியளவில் காரைப் பார்த்தபோதுதான் வலதுபுறக் கதவில் நான்கு துப்பாக்கிக் குண்டுத் துளைகள் இருப்பது தெரிய வந்தது.

கண்காணிப்புக் கேமரா பதிவுகளில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் காரை நோக்கிச் சுடுவது பதிவாகியுள்ளது. 1960 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் 39ஆவது பிரிவின்கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →