Oct 31, 2026
Thisaigal NewsYouTube

சுங்கை பூலோவில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை புகார்: பெட்ரோல் நிலையத்தில் விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுங்கை பூலோவில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை புகார்: பெட்ரோல் நிலையத்தில் விசாரணை

சிலாங்கூர், சுங்கை பூலோவில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் தண்ணீர் கலந்த ரோன்95 பெட்ரோல் விற்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது.

பத்து 14 பகுதியில் உள்ள அந்தப் பெட்ரோல் நிலையம் குறித்து அக்டோபர் 19ஆம் தேதி புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, அன்றே அதிகாரிகள் சோதனை நடத்தியதாக அமைச்சின் சிலாங்கூர் மாநில இயக்குநர் ஹானிஃப் அசாரி தெரிவித்தார்.

அப்போது பெட்ரோல் நிரப்பும் மூன்று முனைகளிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வுக்காக ரசாயனத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

விசாரணைக்கான ஆவணம் திறக்கப்பட்டுள்ளதாகவும், பெட்ரோலின் தரத்தை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட நிலையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, சிலாங்கூரில் ஏழு பெட்ரோல் நிலையங்களில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்கப்படுவதாக ஏற்கெனவே 10 புகார்கள் கிடைத்துள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →