பட்டர்வொர்த், நவம்பர்.08-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமினால் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா கண்ட பினாங்கு, செபராங் பிறை யுடிசி மையம் அப்பகுதியைச் சேர்ந்த பத்து லட்சம் மக்களுக்கு நன்மை அளிக்க வல்லதாகும்.
இந்த யுடிசி மையம், செபராங் பிறை மக்களுக்கு மட்டுமின்றி, கெடா, தென்பகுதி எல்லையில் உள்ள மக்களுக்கும், பேராவில் வடப்பகுதி மக்களுக்கும் பலன் அளிக்கக்கூடியதாகும்.
நாட்டில் 24 ஆவது யுடிசி மையமாகவும், பினாங்கில் இரண்டாவது யுடிசி மையமாகவும் இது திகழ்கிறது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட பரிந்துரைக்கு ஏற்ப செபராங் பிறை யுசிசி மையம் கட்டப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








