Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஜுன் 28 ஆம் தேதி எஸ்.பி.ஆர் கூடுகிறது
தற்போதைய செய்திகள்

ஜுன் 28 ஆம் தேதி எஸ்.பி.ஆர் கூடுகிறது

Share:

கிளந்தான், குவா முசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்ற உறுப்பினர் அஸிஸி அபு நைம், தாம் உறுப்பினராக அங்கம் வகித்த பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் தயாராகி வருகிறது.

அஸிஸி அபு நைம் நீக்கத்தைத் தொடர்ந்து நெங்கிரி சட்டமன்றத் தொகுதி காலியாகி விட்டதாக கிளந்தான் சட்டமன்ற சபா நாயகர் முகமது அமர் நிக் அப்துல்லா இன்று அறிவித்துள்ளார். அத்தொகுதியில் 60 நாட்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதியை நிர்ணயிப்பதற்கு வரும் ஜுன் 28 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தின் சிறப்புக்கூட்டம் நடைபெறவிருப்பதாக அதன் செயலாளர் இந்தேரா இக்மல்ருதீன் அறிவித்துள்ளார்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது