Oct 9, 2026
Thisaigal NewsYouTube

விரைவான ஸ்கிரிப்ட் ஒப்புதல்களுக்கு அதிகமான செயலாக்க நேரம் குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் டத்தோ ஃபாமி கூறுகிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விரைவான ஸ்கிரிப்ட் ஒப்புதல்களுக்கு அதிகமான செயலாக்க நேரம் குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் டத்தோ ஃபாமி  கூறுகிறார்

புத்ராஜெயா, ஜூன்.26-

அனைத்துலகத் தயாரிப்பு நிறுவனங்களுக்கான ஸ்கிரிப்ட் ஒப்புதல்கள் உட்பட திட்டமிடல் விண்ணப்பங்களுக்கான செயலாக்க நேரத்தையும், நடைமுறைச் சிக்கல்களையும் குறைப்பதில் தொடர்புத்துறை அமைச்சு வெற்றிக் கண்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

தொடர்புத்துறை அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கையின் வாயிலாக குறிப்பிட்ட சாதனையை எட்டிப் பிடிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சீர்திருத்தங்களின் வாயிலாக திறமையின்மையைக் குறைப்பதிலும், படப்பிடிப்பு மற்றும் ஊடகத் தயாரிப்புக்கான ஒரு இடமாக மலேசியாவின் ஈர்ப்பை அதிகரிப்பதிலும் ஒரு முக்கிய மைல் கல்லைத் தொட முடிந்தது என்று டத்தோ ஃபாமி தெரிவித்தார்.

நாட்டில் திரைப்படம் எடுக்க விரும்பும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஸ்கிரிப்ட் சரிபார்த்தல் ஒரு முக்கியத் தேவையாக இருப்பதால், இது தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திற்கு பெருமை சேர்க்கும் சாதனையாகும் என்று டத்தோ ஃபாமி இன்று புகழ்மாலை சூட்டினார்.

சிவப்பு நாடா எனும் செயலாக்க நேரத்தைக் குறைப்பதற்கான சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய மூன்று அமைச்சுகளில் தகவல் தொடர்பு அமைச்சும் ஒன்றாகும். இந்தச் சாதனைக்காக சிறப்பு பாராட்டுச் சான்றிதழை அது பெற்று இருப்பதாக டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →