மத்திய பொருளகமான பேங்க் நெகாரா கட்டடத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்தவிருப்பதாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லௌடீன் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பேங்க் நெகாராவின் பணியாளர் ஒருவருக்கு வந்த மின் அஞ்சல் ஒன்றில் பேங்க் நெகாராவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது என்று டத்தோ அல்லௌடீன் குறிப்பிட்டார்.
வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் மூலம் அந்த மத்திய வங்கியின் கட்டடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் வெடிப்பொருள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
எனினும் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சலில் தகவலை அனுப்பிய நபர் தேடப்பட்டு வருவதாகவும், குற்றவியல் சட்டம் 507 பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதகாவும் அ வர் குறிப்பிட்டார்.







