Sep 3, 2026
Thisaigal NewsYouTube
பக்காத்தான் ஹராப்பானுடன் கூட்டணி இல்லை — அக்மால்: இது தனிப்பட்ட முடிவு அல்ல, அம்னோ இளைஞர் அணியின் நிலைப்பாடு
தற்போதைய செய்திகள்

பக்காத்தான் ஹராப்பானுடன் கூட்டணி இல்லை — அக்மால்: இது தனிப்பட்ட முடிவு அல்ல, அம்னோ இளைஞர் அணியின் நிலைப்பாடு

Share:

மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்ற தமது நிலைப்பாடு தனிப்பட்ட முடிவு அல்ல என்றும், அம்னோ இளைஞர் அணியின் நிலைப்பாட்டையே அது பிரதிபலிப்பதாகவும் டாக்டர் அக்மால் சாலே தெரிவித்துள்ளார்.

பதவிக்காகத் தமது கொள்கைகளை விட்டுக்கொடுக்கத் தாம் தயாராக இல்லை எனக் கூறிய அவர், மலாக்காவில் தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து போட்டியிட்டால், தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

தாம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மட்டுமல்லாமல், அம்னோ இளைஞர் அணித் தலைவராகவும் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைவதைத் தமது அணி விரும்பவில்லை என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய முன்னணிக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், இறுதி முடிவை மலாக்கா தேசிய முன்னணி தலைவரும், முதலமைச்சருமான அப்துல் ரவூப் யூசோப் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்று ஜாஹிட் கூறியுள்ளார்.

Related News

நிலநடுக்கத்தால் குலுங்கிய கெனிங்காவ் — பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

நிலநடுக்கத்தால் குலுங்கிய கெனிங்காவ் — பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழப்பு 1,252 ஆக உயர்வு — 4,216 பேர் தொடர்ந்து காணவில்லை

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழப்பு 1,252 ஆக உயர்வு — 4,216 பேர் தொடர்ந்து காணவில்லை

விமான நிலையங்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் — Saifuddin Nasution தகவல்

விமான நிலையங்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் — Saifuddin Nasution தகவல்

2021இல் சிறப்பு லாட்டரி குலுக்கல்கள் 22 முறை நடத்தப்பட்ட முடிவு அமைச்சரவையின் கூட்டு முடிவு — தெங்கு ஸஃப்ருல்

2021இல் சிறப்பு லாட்டரி குலுக்கல்கள் 22 முறை நடத்தப்பட்ட முடிவு அமைச்சரவையின் கூட்டு முடிவு — தெங்கு ஸஃப்ருல்

பினாங்கில் குடிநீர் கட்டணம், நில வரியை உயர்த்துவதை ஒத்திவைக்க வேண்டும் — லிம் குவான் எங்

பினாங்கில் குடிநீர் கட்டணம், நில வரியை உயர்த்துவதை ஒத்திவைக்க வேண்டும் — லிம் குவான் எங்

தென் தாய்லாந்து ஆயுதக் குழுவினருக்கு மலேசியா அடைக்கலம் அளிக்காது — சைஃபுதீன் நசுத்தியோன்

தென் தாய்லாந்து ஆயுதக் குழுவினருக்கு மலேசியா அடைக்கலம் அளிக்காது — சைஃபுதீன் நசுத்தியோன்