May 21, 2026
Thisaigal NewsYouTube
PPR Lobak இல் பத்தாண்டுகள் கட்டணம் செலுத்தாம் தங்கியவர்கள்
தற்போதைய செய்திகள்

PPR Lobak இல் பத்தாண்டுகள் கட்டணம் செலுத்தாம் தங்கியவர்கள்

Share:

வறிய நிலை மக்களுக்காக உருவாக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு வீடுகளில் பத்தாண்டுகளாக வாடகையைச் செலுத்தாமல் பலர் தங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

நெகிரி செம்பிலான், லோபாக் வட்டாரத்தில் அமைந்துள்ள பிபிஆர் வீடுகளில் வசிக்கும் 85 விழுக்காட்டினர் இவ்வாறு நடந்து கொள்வதாக அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் Chew Seh Yong கூறினார்.

மாதம் 150 வெள்ளி வாடகையைச் செலுத்தாததால் வீட்டிற்குத் தலா 30 ஆயிரம் வெள்ளி வாடகை பாக்கி நிலுவையில் இருப்பதாகவும் ஒட்டு மொத்தமாக 10 லட்சம் வெள்ளியை எட்டியுள்ளதாக Chew Seh Yong தெரிவித்தார்.

இன்று 131 வீடுகளில் வசிக்கின்றவர்கள் வாடகையைச் செலுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தப் பழக்கம் தொடர்ந்தால், அது மற்றவர்களுக்கும் பரவத் தொடங்கி விடும். நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதும் இவ்வாறானச் சூழலுக்கு வழி வகுக்கிறது.

எனவே, வாடகையைச் செலுத்தத் தவறும் குடியிருப்பாளர்களின் வீடுகள் பூட்டப்படுவது போன்ற கடுமையான நடவடிக்கையை சிரம்பான் நகராண்மைக் கழகத்தால் எடுக்கப்படுவதோடு வாடகை ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும் எனவும் Chew Seh Yong குறிப்பிட்டார்.

Related News