Dec 3, 2025
Thisaigal NewsYouTube
10 மாதக் குழந்தை உட்பட இருவர் மரணம்
தற்போதைய செய்திகள்

10 மாதக் குழந்தை உட்பட இருவர் மரணம்

Share:

கார் ஒன்று த்ரெலர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை, 1.15 மணியளவில், ரொம்பின், குவாந்தான் ஜொஹோர் பாஹ்ரு செல்லும் சாலையின் 145 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 30 வயதுடைய அசிருள் அசீம் மாஸ்ரி மற்றும் 10 மாத ஆண் குழந்தையான முகமட் அட்வா ஆகிய இருவரும் மாண்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் துணை சுபெரிடென்டன் முகமாட் அசாஹரி முக்தார் தெரிவித்தார்.

பெரோடுவா மைவி ரக காரில் ஜோகூர் பாருவில் இருந்து குவாந்தனை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த த்ரெலர் லோரியை மோதி விபத்துக்குள்ளானதில் அவ்விருவரும் மாண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக முகமட் அசாஹரி குறிப்பிட்டார்.

Related News