கோலாலம்பூர், நவம்பர்.21-
நாட்டில் 6 மாநிலங்களில் இன்று நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கி வரும் நவம்பர் 26 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா அறிவித்துள்ளது.
பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேரா கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய 6 மாநிலங்களில் கன மழை தொடரும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
பேரா மாநிலத்தில் கெரியான், லாருட் மாத்தாங்/ செலாமா, உலு பேரா, கோல கங்சார் ஆகிய பகுதிகளில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என்று மெட்மலேசியா எச்சரித்துள்ளது.








