திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மலேசியப் பெண் தனது பயணப் பெட்டியில் 2 இராட்ஷச அணில்கள் வைத்திருந்ததைத் தொடர்ந்து அவர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி நிகழ்ந்தது. அந்த அணில்கள் 1962 ஆம் ஆண்டு இந்தியா சுங்கத் துறை சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பந்தப்பட்ட மலேசியப் பெண் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.








