Sep 23, 2026
Thisaigal NewsYouTube
தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி
தற்போதைய செய்திகள்

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

Share:

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம், வளர்ச்சி நிதியை முடக்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் மறுத்துள்ளார். மேம்பாட்டு நிதிகள் மக்கள் பிரதிநிதிகள் மூலம் அல்லாமல், நேரடியாக மக்களுக்கே கொண்டுச் சேர்க்கப்படுவதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்று மலாக்கா, அலோர் காஜாவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், ஒரு தொகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி நேரடியாகப் பள்ளிகள், பள்ளிவாசல்கள் மற்றும் வடிகால் பழுதுபார்ப்பு போன்ற பொதுப் பணிகளுக்கு மட்டுமே அனுப்பப்படும் என்றார். "எப்போதிலிருந்து நிதி எம்பிக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் வந்தது? நிதி யாருக்குப் போக வேண்டும், எம்பிக்கா அல்லது மக்களுக்கா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறப்புத் தொகுதி நிதியை நிர்வகிக்கும் 'மைக்காஸ்' (MyKhas) அணுகலை தாங்கள் இழந்துள்ளதாக பிகேஆர் கட்சியைச் சேர்ந்த சில எம்பிக்கள் அண்மையில் புகார் அளித்திருந்த நிலையில், பிரதமரின் இந்த விளக்கம் வெளிவந்துள்ளது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்