லஞ்ச ஊழல் குற்றத்திற்காக காஜாங் சிறைச்சாலையில் 12 ஆண்டு கால தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு கோவிட் 19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 70 வயதான நஜீப், தற்போது கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அவரின் சிறப்பு அதிகாரி முகமது முக்கிஸ் மொராக்கோ தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கடுங் காய்ச்சலுக்கு ஆளானதாக கூறப்படும் நஜீப்பிற்கு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முகமது முக்கிஸ் குறிப்பிட்டார்.








