கோலாலம்பூர், செப்டம்பர்.08-
பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினன் மார்கோஸ் ஜுனியருடன் பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
பிராந்தியப் பாதுகாப்பு, மேம்பாடு, பொருளாதாரம் மற்றும் நடப்பு அரசியல் சவால்களை எதிர்கொள்ள ஆசியானின் ஒற்றுமையை வலுப்படுத்துவது குறித்து ஃபெர்டினன் மார்கோஸ் ஜுனியருடன் அன்வார் விவாதித்துள்ளார்.
ஆசியானின் கீழ் மலேசியாவிற்கும் பிலிப்பைன்சுக்கும் இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஃபெர்டினன் மார்கோஸ் ஜுனியருடன் தாம் விவாதித்ததாக அன்வார் தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.








