Jul 2, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத் தடுப்பு குளங்கள் அருகே மேம்பாட்டு அனுமதி - முந்தைய அரசாங்கத்தை சாடிய ஹன்னா இயோ
தற்போதைய செய்திகள்

வெள்ளத் தடுப்பு குளங்கள் அருகே மேம்பாட்டு அனுமதி - முந்தைய அரசாங்கத்தை சாடிய ஹன்னா இயோ

Share:

வெள்ளப் தடுப்புக் குளங்கள் அமைந்த பகுதிகளில் மேம்பாட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய முந்தைய அரசின் முடிவு “முட்டாள்தனமானது” என்று கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ சாடியுள்ளார்.

அது போன்ற மேம்பாட்டுத் திட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கோலாலம்பூரில் வெள்ளத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட பகுதிகளில், 70 விழுக்காடு இழக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பேரிடர்களை சமாளிக்க தேவையான மாற்று பாதுகாப்பு நிலப்பரப்புகள் தற்போது போதுமான அளவில் இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதனிடையே, இந்த மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டது தொடர்பான விசாரணையில், ஊழலுக்கான ஆதாரங்கள் இல்லையென எஸ் பி ஆர் எம் அறிவித்துள்ளது குறித்து, அவர்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.

Related News

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

"பெக்கான் நானாஸில் மீண்டும் ஒரு இரத்தக் களரி வேண்டாம்!" –  இளைஞரின் குடும்பம் அவசரக் கோரிக்கை!

"பெக்கான் நானாஸில் மீண்டும் ஒரு இரத்தக் களரி வேண்டாம்!" – இளைஞரின் குடும்பம் அவசரக் கோரிக்கை!

கைதிகள் மீதான தாக்குதல்: தைப்பிங் சிறைக்காவலர்கள் 5 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

கைதிகள் மீதான தாக்குதல்: தைப்பிங் சிறைக்காவலர்கள் 5 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்