Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையை முழுமையாகச் சீரமைக்க பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையை முழுமையாகச் சீரமைக்க பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

ஈப்போ, ஜூன்.21-

13வது மலேசியா திட்டத்தின் கீழ் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையை முழுமையாக மறுசீரமைக்கும் முடிவை பரிசீலிக்குமாறு பேராக் மந்திரி பெசார் சராணி முகமட் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

சேதமடைந்த சாலைகளைச் சரி செய்வதற்குப் பதிலாக, பொதுப்பணித் துறை மூலம் நெடுஞ்சாலையை சீரமைப்பது மற்றும் விரிவான மேம்படுத்தலைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

நெடுஞ்சாலையின் கட்டமைப்பு மோசமாக உள்ளதால், அதனைச் சரிசெய்யும் முறை போதுமானதாக இல்லை, மாறாக அதனை மறுசீரமைப்பதே சாலச் சிறந்த என சராணி முகமட் கூறினார்.

ஜூன் 15 அன்று, மஞ்சோங்கிற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வருகை புரிந்த போது இது தொடர்பாகப் பேசியதாக அவர் மேற்கோள் காட்டினார்.

மாநில அரசாங்கத்தின் தேவையைப் பிரதமர் அறிந்துக் கொண்டாலும், அதற்கான அதிக செலவீனத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

எனினும், மாநில அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தத் திட்டம் ஒரு முக்கியமான தேவை என்பதால், வரவிருக்கும் 13வது மலேசியா திட்டத்தில் சேர்க்கப்படுவதை உறுதிச் செய்ய பணியாற்றி வருவதாக சராணி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →