Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பேருந்துப் பயணிகள் அறுவர் காயம்
தற்போதைய செய்திகள்

பேருந்துப் பயணிகள் அறுவர் காயம்

Share:

பிரேக் செயலிழந்ததால் விரை​வு பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்த சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பயணிகள் காய​முற்றனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 257 ஆவது கிலோமீட்டரில் கோல கங்சார் அருகில் நிகழ்ந்தது. 26 பயணிகளுடன் அந்த விரைவு பேருந்து பினாங்கிலிருந்து கோலாலம்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாக பேரா மாநில ​தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி இயக்குநர் முகமடுல் எஹ்சான் முகமட் ஸாயின் தெரிவித்தார். பிரேக் செயலிழந்து விட்டது என்பதை அறிந்தவுடன அந்தப் பெருந்தை நிறுத்துவதற்கு அதன் ஓட்டுநர் முயற்சித்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News