தனது மகனை சித்ரவதை செய்ததாக மாதுவும், அவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த ஆண் நடத்தை கொண்ட திருநம்பியும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர். ஏற்கனவே இக்குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய அவ்விருவரும், இன்று தங்கள் வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டு, குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
நீதிபதி விஎம் மாபெல் ஷீலா முன்னிலையில் நிறுத்தப்பட்ட அவ்விருவரும், தங்கள் பராமரிப்பில் இருந்த 7 வயது சிறுவனை உடல் ரீதியாக சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தனித்து வாழும் தாயான அந்த மாது ஒரே வீட்டில் திருநம்பியுடன் வசித்து வந்த வேளையில் கடந்த ஜுலை முதல் தேதிக்கும், ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜோகூர்பாரு, பாசீர் கூடாங், பண்டார் லயாங்கசா என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


