Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது

Share:

சாலைபோக்குவர​த்து இலாகாவான ஜேபிஜே வின் சாலைத்தடுப்பு சோதனையின் போது, அதன் அமலாக்க அதிகாரியை மோட்டார் சைக்கிளில் மோதித் தள்ளி காயம் விளைவித்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு போர்ட்டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

25 வயது நோர் கைருல் அஸ்வா அசிசி என்ற அந்த நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் உத்தமன் அப்துல் கானி அபாரதத் தொகையை விதித்தார்.

அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் ​மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கு உத்தரவிட்டார்.

கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சிரம்பான் - போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையி​ன் 28 ஆவது கிலோ​மீட்டரில் சாலைத் தடுப்பு சோதனையில் ​ஈடுபட்டு இரு​ந்த ஜேபிஜே அதிகாரி 29 வயதுடைய முஹமாட் நுர்ஹாகிம் முஹமாட் ராசிஃப் என்பவரை மோட்டார் சைக்கிளில் மோதி,காயம் விளைவித்ததாக நோர் கைருல் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News