Oct 18, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் துணை அமைச்சர் காலமானார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முன்னாள் துணை அமைச்சர் காலமானார்

சிரம்பன், செப்டம்பர் 20-

தொடர்புத்துறை மற்றும் பல்லூடக முன்னாள் துணை அமைச்சரும், நெகிரி செம்பிலான், கோலா பிலா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினமான டத்தோ எடின் இயாஸ்லீ ஷித் இன்று காலை 7.10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 50.

பெரிக்காத்தான் நேஷனலின் நெகிரி செம்பிலான் மாநில தலைருமான டத்தோ எடின் இயாஸ்லீ, கடந்த ஐந்து மாத காலமாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப்பெற்று வந்த டத்தோ எடின் இயாஸ்லீ, நேற்று வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் உயிர் இன்று காலையில் பிரிந்தது. அவரின் மரணம், நெகிரி செம்பிலான் பெரிக்காத்தான் நேஷனலுக்கு பேரிழப்பாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →