Mar 14, 2026
Thisaigal NewsYouTube
இலவச பேருந்து சேவை அடுத்தாண்டும் தொடரப்படும்
தற்போதைய செய்திகள்

இலவச பேருந்து சேவை அடுத்தாண்டும் தொடரப்படும்

Share:

பினாங்கு மாநிலத்தில், முத்தியாரா அட்டை பயன்படுத்தப்படும் ரெபிட் பினாங்கு நிறுவனத்தின் கீழ் இயங்கும் பேருந்து சேவை அடுத்த ஆண்டும் இலவசமாக செயல்படும் என பினாங்கு மாநில அடிப்படை வசதிகள், போக்குவரத்து, இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் சைரில் கிர் ஜொஹாரி தெரிவித்தார்.

இதற்காக பினாங்கு மாநில அரசாங்கம் 7.5 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

முத்தியாரா அட்டையின் வழி பேருந்து சேவைக்கான செலவை ஏற்கும் ஒரே மாநில அரசு பினாங்கு எனக் கூறிய அவர், தனிப்பட்ட அல்லது சொந்த வாகனப் பயன்பாட்டில் இருந்து பொதுப் போக்குவரத்துக்கு மக்கள் மாறி, வாழ்க்கைச் செலவைக் குறைத்துக் கொள்ள வழி செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News