மலேசியாவில், ஆண்களின் மலட்டு தன்மை தொடர்பான பிரச்னைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று மேலவையில் தெரிவிக்கப்பட்டது.
ஆண்கள் தொடர்பாக தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், 60 விழுக்காடு முடிவின் படி அதிகமான ஆண்கள் மலட்டுத் தன்மைp பிரச்னையை எதிர்நோக்கியிருப்பதாக மகளீர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் ஐமான் அதிரா சாபு தெரிவித்தார்.
இதன் காரணமாக, திருமணமான பல தம்பதியர், குழந்தை பாக்கியமின்றி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆண்களின், மலட்டுத் தன்மை பிரச்னை தீர்க்கப்பட்டு, அவர்களின் இல்லற வாழ்வு சிறக்க ஆண்களுக்கான நல்வாழ்வு கிளினிக்குகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக ஐமான் அதிரா விளக்கினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


