Oct 18, 2026
Thisaigal NewsYouTube

விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது

ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 30-

தந்தைப்பெற்ற கடனுக்காக மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி,கடனை அடைக்க செய்ததாக கூறப்படும் தகவல் தொடர்பில் சட்டவிரோத வட்டி முதலையான Along கும்பலுக்கு எதிராக போலீசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.

இது குறித்து மேல்விபரங்களை வெளியிட முடியாது என்று குறிப்பிட்ட பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது, தற்போது இவ்விவாகரம் போலீசாரின் விசாரணையில் இருந்து வருவதாக குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு காணொளி தொடர்பில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

சம்பந்தப்பட்ட பெண் பினாங்கில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக டத்தோ ஹம்சா குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →