Oct 15, 2026
Thisaigal NewsYouTube

வெளிநாட்டுப் பொருட்களுக்குக் கடிவாளம்? உள்ளூர் வணிகர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெளிநாட்டுப் பொருட்களுக்குக் கடிவாளம்? உள்ளூர் வணிகர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை

மலேசியச் சந்தையில் நுழையும் வெளிநாட்டு நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் வணிகச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அமலாக்க நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசு ஆராயவுள்ளது.

துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் தலைமையில் நடைபெற்ற உள்ளூர் பொருட்களை வாங்குவதையும் பயன்படுத்துவதையும் வலுப்படுத்தும் அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.

உள்ளூர் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், குறிப்பாக வேகமாக வளர்ந்து வரும் இணையவழி வர்த்தகத்தில் எதிர்கொள்ளும் போட்டியைக் கருத்தில் கொண்டு, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சும் நிதி அமைச்சும் இணைந்து இதனை ஆராயவுள்ளன.

மேலும், உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்கும் ‘ஜோம் மலேசியா’ திட்டத்திற்காக 2027 வரவு செலவுத் திட்டத்தில் 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்ததையும் ஃபாடில்லா சுட்டிக் காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

குரூனில் 19 வயது இளைஞர் கொலை: 14 பேர் மீது குற்றச்சாட்டு

குரூனில் 19 வயது இளைஞர் கொலை: 14 பேர் மீது குற்றச்சாட்டு

விடுதி கட்டடத்திலிருந்து விழுந்ததாகச் சந்தேகம்: 21 வயது பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

விடுதி கட்டடத்திலிருந்து விழுந்ததாகச் சந்தேகம்: 21 வயது பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு