நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தைக் கலைப்பதற்கான வேலைகள் மறைமுகமாக நடந்து வருவது அந்த அரசாங்கத்தின் தலைவர்கள் நன்கு அறிவார்கள் என பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபாயீஸ் நா ஆமான் தெரிவித்துள்ளார்.
நேற்று முந்தினம் தனது முகநூல் பக்கத்தில் '126 இருக்கின்றது. உண்மை என்றால் நல்லது' என்ற தொனியிலான வாசத்தை அவர் எழுதிய எதிரொலியாக , ஒற்றுமை அரசாஙக் ஆதரவாளர்கள் கோபம் ஏற்பட்டு அவர் முகநூல் பக்கத்தில் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளதாக டாக்டர் முகமட் ஃபாயீஸ், பெரித்தான் ஹரியான் நாளிதழிடம் கூறியுள்ளார்.
இருந்த போதும் , 126 என்பது எதை பிரதிபலிக்கின்றது என செய்தி நிறுபர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் மௌனம் சாதித்ததாக பெரித்த ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.








