Oct 16, 2026
Thisaigal NewsYouTube

எந்தவொரு புகாரையும் போலீசார் பெறவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எந்தவொரு புகாரையும் போலீசார் பெறவில்லை

கோலாலம்பூர், டிச.4-


17 மில்லியன் மலேசியர்களின் மைகாட் தரவுகள் கசிந்துள்ளதாகவும், அவை கள்ளச்சந்தை அகப்பக்கத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது தொடர்பில் போலீசார் எந்தவொரு புகாரையும் பெறவில்லை என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை துணை இயக்குநர் டத்தோ ரொஹாய்மி முகமட் தெரிவித்தார்.

மலேசியர்களின் மைகாட் தரவுகள் கள்ள சந்தை அகப்பக்கத்தில் விற்கப்பட்டுள்ளதாக X கணக்கில் சிங்கப்பூரை தளமாக கொண்ட தகவல், தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் எந்தவொரு புகாரும் கிடைக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

கள்ள சந்தை அகப்பக்கத்தில் மலேசியர்களின் மைகாட் அட்டைகளின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவாக உள்ளது என்றும், நிதி மோசடி இடர்கள் போன்ற ஏமாற்று வேலைகளுக்கு அந்த தரவுகள் பயன்படுத்தப்படக்கூடும் என்றும், அந்த நிறுவனம் தெரிவித்து இருந்தது தொடர்பில் டத்தோ ரொஹாய்மி எதிர்வினையாற்றினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →