Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பள்ளி வளாகங்களில் மதுபானம் கூடாது
தற்போதைய செய்திகள்

பள்ளி வளாகங்களில் மதுபானம் கூடாது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.23-

பள்ளி வளாகங்களில் நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் மதுபான உபசரிப்பு நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொண்டார்.

பள்ளி நேர முடிவடைந்து அல்லது விடுமுறை நாட்களில் நடைபெறும் பள்ளிக்கான நிதி திரட்டும் நிகழ்வுகளில் மதுபான உபசரிப்பு ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அது பள்ளி வளாகத்தில் மட்டுமின்றி, பள்ளி மண்டபத்திலும் இதனை அனுமதிக்க முடியாது என்று பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக பள்ளி விதிமுறைகளைச் சரி பார்க்கும்படி அவர் கல்வி அமைச்சைக் கேட்டுக் கொண்டார்.

எனினும் அது தனியார் பள்ளிகளாக இருக்கும் பட்சத்தில் அதனைச் சரி பார்ப்பதில் அல்லது உத்தரவு விடுவதில் சிக்கல் இருப்பதையும் டத்தோ ஶ்ரீ அன்வார் ஒப்புக் கொண்டார்.

Related News