Dec 2, 2025
Thisaigal NewsYouTube
MM2H விண்ணப்பதாரர்கள் கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்
தற்போதைய செய்திகள்

MM2H விண்ணப்பதாரர்கள் கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.28-

மலேசியா எனது இரண்டாவது வீடு திட்டத்தின் கீழ் மலேசியாவிற்கு வர நினைக்கும் வெளிநாட்டவர்கள் தற்போது கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்று உள்துறை துணையமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷாம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மட்டுமே MM2H விண்ணப்பங்களைக் கையாள அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

MM2H திட்டம் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும் கூட, கடுமையான சோதனை தேசிய நலன்களைப் பாதுகாக்கும் என்றும் ஸ்ஆஸூஈண் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒப்புதல் வழங்கப்படுவதற்கு முன்பு, அவர்கள் காவல்துறை பின்னணி சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அமைச்சிலிருந்து அனுமதி பெற வேண்டும் என்றும் ஷாம்சுல் தெரிவித்துள்ளார்.

Related News