Mar 17, 2026
Thisaigal NewsYouTube
திருட்டு கும்பலை சேர்ந்த மற்றொருவர் பிடிப்பட்டார்
தற்போதைய செய்திகள்

திருட்டு கும்பலை சேர்ந்த மற்றொருவர் பிடிப்பட்டார்

Share:

கோத்தா கினாபாலு, பிப்ரவரி 22 -

கோத்தா கினாபாலுவில் வீட்டினுள் புகுந்து கொள்ளையிட்ட பிறகு காவல் அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக தங்கும் விடுதியில் பதுங்கி வந்த திருட்டு கும்பலை சேர்ந்த மற்றொருவர் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டார்.

' அகுட்' என்று அடையாளம் காணப்படும் 38 வயதுடைய சந்தேகிக்கும் நபர் நேற்று இரவு 8:10 மணியளவில் சடோங் ஜெயா, ஜாலான் டெலிமா - வில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சபா, ஜே.எஸ்.ஜே காவல்படை தலைமையகத்தின் போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சபா, குற்றப்புலனாய்வு துறையின் தலைவர் ஏசிபி அஸ்மி அப்துல் ராஹிம்தெரிவித்தார்.

சபா, ஜேஸ்ஜே -வின் உளவுத்துறை மற்றும் செயல்பாட்டு துறையின் நடவடிக்கைகளின் கீழ் சந்தேகிக்கும் நபர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த வேளையில் கைது செய்யப்பட்டிருப்பதாக அஸ்மி அப்துல் ராஹிம் கூறினார்.

விசாரணையின் போது அந்நபரின் பை, வாடகை காரில் இருந்த கேமரா, காலணிகள், முகமூடி, காரின் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் இன்று குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் மேலும் 3 நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட ஆடவர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அஸ்மி அப்துல் ராஹிம் அறிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு