கோலாலம்பூர், அக்டோபர்.31-
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு, அமைச்சர்களுக்கு உண்டு என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
அதே வேளையி. அமைச்சர்கள் அளிக்கக்கூடிய ஒவ்வொரு பதிலும் விவேகத்துடனும், திறந்த கொள்கையின் அடிப்படையிலும் வழங்கப்பட வேண்டும் என்று டத்தோ ஃபாமி வலியுறுத்தினார்.
தகவல்கள் துல்லியமாக தெரிவிக்கப்படுவதையும், குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருப்பதையும் உறுதிச் செய்யவும் அரசாங்கத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையிலான தொடர்பு பரஸ்பர மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
ஊடகவியலாளர்கள் தாங்கள் சார்ந்த பொறுப்புக்கு ஏற்ப கேள்வி கேட்கும் உரிமையைப் பெற்றுள்ளளனர். அதற்கு உரிய பதிலை அமைச்சர்கள், விவேகத்துடன் வழங்க வேண்டும். அது நம்முடைய கடமையாகும் என்று டத்தோ ஃபாமி வலியுறுத்தினார்.








