Oct 9, 2026
Thisaigal NewsYouTube

காய்கறி விநியோகத்தைப் பாதிக்கச் செய்யாது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காய்கறி விநியோகத்தைப் பாதிக்கச் செய்யாது

கோலாலம்பூர், ஜூன்.28-

தற்போது நாட்டில் தொடங்கியுள்ள வெப்ப நிலையானது, காய்கறி விளைச்சல் மற்றும் அவற்றின் விநியோகத்தைப் பாதிக்கச் செய்யாது என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள காய்கறிகள் உற்பத்தி மாநிலங்களிலிருந்து நாள்தோறும் போதுமான காய்கறிகள் விநியோகம் இருப்பதை தனது தலைமையிலான அமைச்சு உறுதி செய்யும் என்று முகமட் சாபு உறுதி அளித்துள்ளார்.

உதாரணத்திற்கு வட மாநிலங்களில் வறட்சி கடுமையாகுமானால், தென் மாநிலங்களிலிருந்து காய்கறி விநியோகம் பெறப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →