தமது இரு சிறுநீரங்களையும் விற்கப்போவதாகவும், ஆர்வமுள்ளவர்கள் அவற்றை வாங்கிக்கொள்ளலாம் என்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டிக் டாக் பயனர் ஒருவர், தமது செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
தமது இரு சிறுநீரகங்களையும் விற்கப் போகும் திட்டம் ஏதுவும் தமக்கு இல்லை என்று டேடி கெசி என்ற பெயரில் அந்த அறிவிப்பைச் செய்த ஆடவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தாம் எதிர்நோக்கியுள்ள கடன் பிரச்னையைத் தீர்ப்பதற்காக அவசரப்பட்டு எடுத்த முடிவின் விளைவாக அதனை டிக் டாக் கில் பதிவேற்றம் செய்து விட்டதாகவும், சிறு நீரகங்களை விற்ற பின்னர் வாழ்க்கையில் அடுத்த நடக்கக்கூடிய துயரங்களை தாம் தெளிவாக புரிந்து கொண்டதால் தமது கூற்றில் உண்மையில்லை என்று அந்த இளைஞர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


