Oct 14, 2026
Thisaigal NewsYouTube

முஸ்லிம் அல்லாதவர்கள் சமய விவகாரங்களை கையாளுவதற்கு தனி அமைச்சர் பதவியா? அமைச்சரவைக்கு உடன்பாடுயில்லை என்கிறார் பிரதமர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

சுபாங் ஜெயா, பிப்.14-

முஸ்லிம் அல்லாதவர்களின் சமய விவகாரங்களைக் கையாளுவதற்கு பிரத்தியேகமாக ஓர் அமைச்சர் பதவி உருவாக்கப்பட வேண்டும் என்று டிஏபி எம்.பி. ஒருவர் முன்வைத்த பரிந்துரையை அமைச்சரவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்காக ஓர் அமைச்சர் பதவியை உருவாக்க வேண்டும் என டிஏபியைச் சேர்ந்த ரவுப் எம். பி. சொவ் யூ ஹுய் முன்மொழிந்த பரிந்துரையானது, அவரின் தனிப்பட்ட கருத்தாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

அந்த எம்.பி.யின் பரிந்துரைக்கு யாரும் உடன்படவில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.

இதனிடைய முஸ்லிம் அல்லாதவர்களின் விவகாரங்களை கையாளுவதற்கும், அவற்றை நிர்வகிப்பதற்கும் ஒரு சிறப்பு இலாகாவை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாக பிகேஆர் சிகமாட் எம்.பி. ஆர். யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பல இன மலேசியர்களிடையே பதற்றத்தைத் தவிர்க்க, முஸ்லிம் அல்லாத மதப் பிரச்சினைகளைத் தீர்க்க சிறப்பு இலாகாவை உருவாக்குவது பெரும் உதவியாக இருக்கும் என்று யுனேஸ்வரன் கூறினார்.

"முஸ்லிம் அல்லாத மத விவகாரங்களை நிர்வகிக்க அமைச்சரவையில் சிறப்பு இலாகா தேவையில்லை என்று கூறுகின்றவர்களின் வாதத்தில் தமக்கு உடன்படவில்லை. என்றும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் தாம் விவாதித்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

"தேசிய ஒற்றுமை என்பது பெரும்பாலும் ஒரு விவகாரமாக மாறியுள்ளது, அதற்கான காரணங்களில் ஒன்று மதம். தங்கள் சொந்த அரசியல் நலன்களுக்காக மதத்தைப் பயன்படுத்தும் கட்சிகள் இருப்பதாக யுனேஸ்வரன் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்