Oct 18, 2026
Thisaigal NewsYouTube

பாதாள சாக்கடைக்குள் முக்குளிப்பு முறையில் விஜயலெட்சுமியை தேடும் பணி நிறுத்தப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாதாள சாக்கடைக்குள் முக்குளிப்பு முறையில் விஜயலெட்சுமியை தேடும் பணி நிறுத்தப்பட்டது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 02-

கோலாலம்பூர் வர்த்தகப்பகுதியான மஸ்ஜிட் இந்தியாவில் ஆளை விழுங்கிய பாதாள சாக்கடையில் விழுந்து / காணாமல் போன நிலையில், கடந்த எட்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்த பாதாள சாக்கடைப்பகுதியில் முக்குளிப்பு முறையில் அந்த மாதுவை தேடி கண்டுப்பிடிக்கும் மீட்பு நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

நீரோட்டமும், நச்சுவாயுவும் நிறைந்த பாதாள சாக்கடை குழாய்களில் தொடர்ந்து மீட்புப்பணி மேற்கொள்ளப்படுவது மிக ஆபத்தானது என்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து முக்குளிப்பு முறையில் இன்று காலையில் மேற்கொள்ளப்பட்ட அந்த மீட்பு நடவடிக்கையை நிறுத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மீட்புப்பணிக்கு தலைமையேற்றிருந்த மலேசிய தீயணைப்பு, மீட்புப்படையின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது அறிவித்தார்.

மாநகரின் மையப்பகுதியின் பாதாள சாக்கடை குழிகள் பகிரங்கமாக தெரியும் அளவிற்கு பாதாள சாக்கடை கால்வாய்கள் சுமார் 15 மீட்டர் ஆழத்திற்கு தோண்டப்பட்டு முழு வீச்சில் மீட்புப் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, விஜயலெட்சுமி விழுந்த இடத்திலிருந்து 44 மீட்டர் தூரத்தில் உள்ள பாதாள சாக்கடை கழிவு நீர் குழாயில் ஒரு நீளமான தடுப்பு இருப்பது நேற்று கண்டு, பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த தடுப்புப் பொருளை இலக்காக கொண்டு, அதனை கண்டு பிடிப்பதற்கு இன்று அதிகாலை 3 மணியளவில் முக்குளிப்பவர்கள் அந்த பாதாள சாக்டைக்குள் இறங்கினர்.

அவர்களால் 30 நிமிட நேரத்திற்கும் மிக குறைவாகவே அந்த பாதாள சாக்கடைக்குள் இருக்க முடிந்ததுடன் நீரோட்டம் கடுமையாக இருந்ததால், அந்த தடுப்புப்பொருளை நோக்கி தொடர்ந்து முன்னேறி செல்வது என்பது உயிருக்கு ஆபத்தானது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக Datuk Nor Hisham தெரிவித்தார்.

அந்த பாதாள சாக்கடைக் குழாய்கள் மிக குறுகளானதாகும். சம்பவ இடத்திலிருந்து 18 மீட்டர் தூரம் வரையில் மட்டுமே முக்குளிப்பவர்களால் நீந்திச் செல்ல முடிந்தது. அதற்கு பிறகு நீந்திச்செல்லும் அளவிற்கு குழாய்கள் அனுமதிக்கவில்லை. மனித உடல் நுழைய முடியாத அளவிற்கு குழாய்களின் சுற்றுளவு மிக குறுகளாக அமைந்துள்ளன.

இந்நிலையில் ஆபத்து அதிகமாக காத்திருக்கும் பட்சத்தில் தொடர்ந்து முக்குளிப்பு முறையில் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வது என்பது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று டத்தோ நோர் ஹிஷாம் முகமது அச்சம் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →