Oct 17, 2026
Thisaigal NewsYouTube

பேரங்காடியின் கூரையில் விழுந்த மாது மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேரங்காடியின் கூரையில் விழுந்த மாது மரணம்

கோலாலம்பூர், புடு, நவ.11-


கோலாலம்பூர் மாநகரில் பிரபல பேரங்காடி ஒன்றின் கூரையில் விழுந்ததாக நம்பப்படும் மாது ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இச்சம்பவம் தொடர்பில் அதிகாலை 3.57 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜாலான் ஹாங் துவா மற்றும் புடு ஆகிய நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள், கூரையிலிருந்து அந்த மாதுவின் உடலை மீட்டனர்.

ஸ்கைலீட்டு வாகனத்தின் உதவியுடன் அந்த பெண்ணின் உடலை மீட்கும் நடவடிக்கை காலை 7.48 மணிக்கு நிறைவுப்பெற்றதாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப்படை கமாண்டர் முகமட் புவாட் செலமாாட் தெரிவித்தார்.

உயிரிழந்த மாது, அந்நிய நாட்டைச் சேர்ந்தவர் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →