Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பத்துமலை கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ள புக்கடைகள் உடைப்பு !
தற்போதைய செய்திகள்

பத்துமலை கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ள புக்கடைகள் உடைப்பு !

Share:

பத்துமலைத் திருத்தலத்தின் முன்புறம் உள்ள பூக்கடைகள் இன்று காலை செலாயாங் நகராண்மைக் கழக அதிகாரிகளால் உடைக்கப்பட்டன.

ஏற்கெனவே இந்தக் கடைகள் காலி செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு 24 ஆகஸ்டு 2023 என்ற தேதியிடப்பட்ட நோட்டீஸை செலாயாங் நகராண்மைக் கழகம் கொடுத்திருந்தது..

குறிப்பாக, பூக்கடைகள் செயல்பட்டு வரும் நிலம் பத்து கேவ்ஸ் சேரிட்டி எனும் அமைப்புக்குச் சொந்தமானது. நீதிமன்ற ஆணையின்படி அந்தக் கடைகள் உடைக்கப்பட்டு காலியான நிலமாக பத்து கேவ்ஸ் சேரிட்டி அமைப்புக்கு செலாயாங் நகராண்மைக் கழகத்தால் வழங்கப்பட வேண்டும். அதன்படி இக்கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ஆண்டாண்டு காலமாக இந்தக் கடைகள் இங்கு செயல்பட்டு வரும் நிலையில், மாற்று இடம் கோய்ல் வளாகத்திற்கு அருகிலோ அல்லது மாத வாடகை செலுத்தும் வகையில் அதே இடத்தில் புதிய கடைகள் கட்டிக் கொடுக்கப்படுமா என்பது இங்குள்ள பூக்கடை வியாபாரிகளின் கேள்வியாக உள்ளது.

தற்சமயம் இந்தப் பூக்கடை வியாபாரிகள் கோயிலுக்கு எதிரே உள்ள மேம்பாலத்திற்கு அடியில் தற்காலிகமாக வியாபாரம் செய்து வருவதாக அங்குள்ள வியாபாரி ஒருவர் குறிப்பிட்டார்.

Related News