Oct 15, 2026
Thisaigal NewsYouTube

சந்தேக நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சந்தேக நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

டிச. 29-

குழந்தைகள் ஆபாச நடவடிக்கைகளில் தொடர்புடைய எஞ்சிய சந்தேக நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அண்மையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலும் சில சந்தேக நபர்களைத் தேடி வருவதாக காவல் படைத் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை கூறினார்

அசல் 'இலக்கின்படி' 18 நபர்கள் இருப்பதாகவும் தமது தரப்பு 13 பேரைக் கைது செய்து விட்டதாகவும் குறிய அவர், இன்னும் சிலர் இருக்கலாம் என்று கருதப்படுவதாகத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், குழந்தைகள் ஆபாசப் பொருட்களை வைத்திருப்பது குற்றம் என்று தெரியாது எனக் கூறியுள்ளனர். இது போன்ற குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதைக் காட்டுகிறது என்றார்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் சிலாங்கூர், பேரா, பினாங்கு, ஜோகூர் போன்ற மாநிலங்கள் அடங்கும். மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்துடன் இணைந்து மேலும் பல மாநிலங்களுக்கும் இந்த நடவடிக்கை விரிவடையும் என அயூப் கான் குறிப்பிட்டார்.

சமீபத்தில், ஆறு மாநிலங்களில் குழந்தைகள் ஆபாச - பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய பொருட்களை ஆன்லைனில் வைத்திருந்ததற்காக 13 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இது போன்ற குற்றங்களை ஒழிக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்