ஜார்ஜ்டவுன், நவம்பர்.06-
பினாங்கு, பாயான் லெப்பாஸ், ஜாலான் கெனாரி, சுங்கை ஆரா சாலையில் மிகப் பெரிய புதைகுழி ஏற்பட்டதற்கு நிலைத்தடியில் உள்ள நீர் ஓட்டமே காரணமாகும் என்று மாநில கட்டமைப்பு, போக்குவரத்து, இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஸைரில் கீர் ஜொஹாரி தெரிவித்தார்.
புதைகுழி ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்பதை அறிய அவ்விடம் தோண்டப்பட்டு ஆராயப்பட்ட போது, நிலத்தடியில் பெரிய நீரோட்டம் இருப்பது தெரியவந்துள்ளது என்று பொதுப்பணி இலாகா உறுதி செய்துள்ளது.
நிலத்தடியில் நீரோட்டம் இருப்பதற்கு நீர் குழாய்கள் ஏதும் உடைந்துள்ளனவா என்பது குறித்து தற்போது அலசி ஆராயப்பட்டு வருவதாக அவர் விளக்கினார். சாலையில் ஏற்பட்ட புதைகுழு காரணமாக அந்த சாலை வாகனப் போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.








