Jul 25, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்காவின் 10% வரி விதிப்பால் மலேசிய ஏற்றுமதிக்கு பாதிப்பில்லை: ஜோகாரி கனி
தற்போதைய செய்திகள்

அமெரிக்காவின் 10% வரி விதிப்பால் மலேசிய ஏற்றுமதிக்கு பாதிப்பில்லை: ஜோகாரி கனி

Share:

மலேசியாவின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா புதியதாக விதித்துள்ள 10 விலுகாடு வரி, நாட்டின் போட்டித்திறனைப் பாதிக்காது என்று முதலீட்டு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜொகாரி கனி தெரிவித்துள்ளார்.

கட்டாய உழைப்பு தொடர்பான பிரச்சினைகளால் வாஷிங்டன் விதித்த வரிகளில் இந்த 10 விலுகாடு மிகக் குறைவானது என்பதால், அமெரிக்க சந்தையில் மலேசியாவின் போட்டித்திறன் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஏற்றுமதிச் சந்தையில் பல நாடுகள் இதைவிட உயர்வான கட்டணங்களை எதிர்கொள்ளும் நிலையில், இந்த வரி விதிப்பால் மலேசியாவின் வர்த்தக நிலைப்பாடு பெரிய அளவில் பாதிக்காது என்று ஜொகாரி கனி மேலும் விளக்கமளித்தார்.

Related News