பிரதமர் வலியுறுத்து
மக்களின் நல்வாழ்வை முன்னிறுத்தி தாம் எடுக்கக்கூடிய முடிவுகளை கேள்வி எழுப்பியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடுமையாக சாடினார்.
தம்மை புரட்டு என்று கேலி செய்தாலும், தாம் எப்போதும் மக்களின் நலன்களின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுப்பதாக பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.
பொது சேவைத் துறையின் மருத்துவக் கல்வி உதவித் தொகையை நிறுத்துவதற்கான முடிவு தாம் பொறுப்பில் அமர்வதற்கு முன்னதாக எடுக்கப்பட்டது என்றும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதனை மீண்டும் செயல்படுத்த தாம் முடிவு செய்ததாகவும் பிரதமர் அன்வார் கூறினார்.
மேலும் முந்தைய அரசாங்கத்தின் முடிவின் அடிப்படையில், ஜூன் மாதத்தில் கோழி மற்றும் முட்டைக்கான மானியங்கள் முடிவடைந்தது. ஆனால் அதற்கு பதிலாக அவற்றின் உதவித் தொகையை மீண்டும் தொடர வேண்டும் என்று தாம் முடிவு செய்ததாக இன்று மக்களவையில் டத்தோ டாக்டர் ஸுல்கப்ஃரி ஹனாபி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, பிரதமர் அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.








