Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கடலில் விழுந்த மீனவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடலில் விழுந்த மீனவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது

சிலாங்கூர், நவ. 23-

சிலாங்கூர், பூலாவ் கெத்தாம் கடற்பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் தவறி விழுந்த மீனவர் ஒருவரின் உடல், நேற்று காலை 10.45 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.

Chia Hap Swa என்று அடையாளம் கூறப்பட்ட 59 வயதுடைய அந்த மீனவரின் உடல் பூலாவ் கெத்தாம் கடற்பகுதியில் தென்மேற்கே 8.1 ஆவது கடல் மைல் தொலைவில் கண்டு பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில கடல் சார் அமலாக்க அமைப்பின் இயக்குநர் Abdul Muhaimin Muhammad Salleh தெரிவித்தார்.

அந்த மீனவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை கண்டு பிடிப்பதற்கு தொடங்கப்பட்ட மீட்பு நடவடிக்கை நேற்று பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவுப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →