இனம் அல்லது சமயத்தின் பெயரால் நாட்டு மக்களை பிளவுப்படுத்தும் இற்றுப் போன அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் நேரம் கனிந்து விட்டதாக மூடா கட்சியின் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.
மலேசியாவை அதன் பெயர் மற்றும் உரிமையிலிருந்து மாற்றுவதற்கு மலாய்க்காரர் அல்லாதவர்கள் சில முயற்சி செய்வதாக இனவாதத்தை தூண்டும் தன்மையில் அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தமது நடவடிக்கையை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவை சேர்ந்த அனைத்து இனத்தவர்களும், சமயத்தவர்களும் இந்த நாட்டை நேசிக்கின்றனர். மலேசியாவையோ அல்லது தானா மெலாயூ என்ற பெயரையோ மாற்றுவதற்கு யாரும் முய்றசி செய்வதாக இல்லை. ஆனால், துன் மகாதீர் போன்று இனம் மற்றும் சமயத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்த முற்படும் காலாவதியான, இற்றுப் போன அரசியல் போக்குடைவர்களின் வாதத்தை மக்கள் முற்றாக புறந்தள்ள வேண்டும் என்று மூவார் எம்.பி.யுமான சையிட் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


