Jul 1, 2026
Thisaigal NewsYouTube
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம், விசாரணையில் தாமதம் ஏன்   ? கோபிந்த் சிங் கேள்வி
தற்போதைய செய்திகள்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம், விசாரணையில் தாமதம் ஏன் ? கோபிந்த் சிங் கேள்வி

Share:

மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்து ஐந்து மாதங்களாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லாதது குறித்து ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் தமது அதிருப்தியை இன்று வெளிப்படுத்தினார்.

மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து சட்டத்துறை தலைவர் உடனடியாகப் பகிரங்க விளக்கமளிக்க வேண்டும் என்று இலக்கவியல் அமைச்சரான கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு நவம்பரில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 29 வயது ஜி. லோகேஸ்வரன், 21 வயது எம். புஷ்பநாதன் மற்றும் 24 வயது டி. புவனேஸ்வரன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த மூவரும் கொள்ளையர்கள் என்று போலீசார் வகைப்படுத்தியதை அவர்களின் குடும்பத்தினர் வன்மையாக மறுத்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் போலீசார் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்று என்பதற்கு ஆடியோ பதிவுகள் போன்ற ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் எனப் பொதுமக்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கேள்வி எழுப்புவதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை