தாசெக் கெலுகோர், செப்டம்பர்.28-
புதிய புடி 95 பெட்ரோல் மானியத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 300 லிட்டர் பெட்ரோல் போதுமானதாக இல்லை என்ற புகாரைத் தொடர்ந்து, வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. விவசாயப் பணிகளுக்கு அதிக எரிபொருள் தேவைப்படுவதால், நிதி அமைச்சுடன் இணைந்து அவர்களுக்குச் சிறந்த தீர்வைக் காண அமைச்சு தீவிரமாகப் பேசி வருகிறது எனத் தெரிவித்தார் அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு. விரைவில், விவசாயிகளுக்குச் சலுகைகள் வேறு வழிகளில் வழங்கப்படும் அல்லது மானிய அளவு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை விவசாயிகளின் உற்பத்தித் திறனைப் பாதுகாக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.








