தலைமைத்துவ ஆற்றல் நிறைந்தவர் என்று வர்ணிக்கப்படும் முன்னாள் சுகாதார அமைச்சரும், அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவருமான கைரி ஜமாலுடின் க்கு பெர்சத்து கட்சியின் கதவு இன்னமும் திறந்தே உள்ளது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
பெர்சத்து கட்சியில் கைரி ஜமாலுடினை சேர்ப்பதற்கு பலதரப்பட்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டு விட்டன. ஆனால், கைரி ஜமாலுடின் அது குறித்து இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை என்று பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவருமான முகைதின் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் நாட்டின் பிரதமராக வருவதற்கான வாய்ப்புகளை கொண்டுள்ள கைரி ஜமாலுடின், கவர்வதற்கு தொடர் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று முன்னாள் பிரதமருமான முகைதின் தெரிவித்தார்.








