Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கிளினிக் கணக்காய்வாளர் குனேஸ்வரன் கேசவன் மூன்று நாட்களுக்கு பிறகு கண்டு பிடிக்கப்பட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிளினிக் கணக்காய்வாளர் குனேஸ்வரன் கேசவன் மூன்று நாட்களுக்கு பிறகு கண்டு பிடிக்கப்பட்டார்

டிச.11-

பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமிலுள்ள ஒரு கிளினிக்கில் கணக்காய்வாளராக பணி புரிந்து வந்த 26 வயதுடைய குனேஸ்வரன் கேசவன் என்பவர் கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என்று அவரின் தாயார் கூலிம் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ள நிலையில் அந்த இளைஞர் இன்று கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன குனேஸ்வரன், புக்கிட் மெர்தாஜாமில் வேலை செய்து கொண்டே, கூலிம் , தாமான் கெமுனிங்கிலுள்ள மற்றொரு கிளினிக்கில் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டு, அந்த கிளினிக்கிலேயே தங்கியிருந்ததாக கூறப்பட்டது.

எனினும் மூன்று தினங்களாக குனேஸ்வரன் காணாதது குறித்து பினாங்கு, Simpang Ampat, Taman Putri Gunung- கை சேர்ந்த அந்த இளைஞரின் 53 வயது தாயார் கமலேஸ்வரி முனியாண்டி, கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி போலீசில் புகார் செய்ததாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் Haji Zulkifli Haji Azizan தெரிவித்தார்.

அந்த இளைஞரை தேடுவதற்கு போலீசார் பொது மக்களின் உதவியை நாடிய வேளையில் அந்த நபர், இன்று கண்டு பிடிக்கப்பட்டதாக Haji Zulkifli குறிப்பிட்டார்.

பணியிடத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அந்த இளைஞர் ஒரு கோயிலில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள குறுந்தகவலில் Haji Zulkifli தெரிவித்துள்ளார்.

செய்தி & படம் : ஹேமா எம். எஸ். மணியம்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →