Aug 12, 2026
Thisaigal NewsYouTube
அந்தப் பதவி விலகல் கொள்கையை முதன்மையாகக் கொண்ட நடவடிக்கையே ! – துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி விளக்கம்
தற்போதைய செய்திகள்

அந்தப் பதவி விலகல் கொள்கையை முதன்மையாகக் கொண்ட நடவடிக்கையே ! – துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி விளக்கம்

Share:

கோலாலம்பூர், மே.29-

பிகேஆர் கட்சியின் தேர்தலில் தங்கள் பதவிகளைத் தக்க வைக்கத் தவறியதைத் தொடர்ந்து, பொருளாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி, இயற்கை வளங்கள், நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகிய இரு அமைச்சர்களின் பதவி விலகலைக், கொள்கை அடிப்படையிலான நடவடிக்கை என்று டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி வர்ணித்தார்.

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடாத போதிலும், அமைச்சரவையில் உள்ள சக ஊழியர்களாக, இந்த இரு அமைச்சர்களின் முடிவை மதிப்பதாக துணைப்பிரதமர் தெரிவித்தார். ரஃபிஸியின் பங்களிப்பும் நிக் நஸ்மியின் பங்களிப்பும் மிகவும் பயனுள்ளதாக இருந்தன என்றும், அவர்களது இடங்களை பிகேஆர் கட்சியைச் சேர்ந்த மற்றவர்கள் நிரப்புவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை நியமனங்கள் பிரதமரின் முழுமையான அதிகாரத்திற்கு உட்பட்டவை என்றும் அஹ்மாட் ஸாஹிட் உறுதிப்படுத்தினார்.

Related News