Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வீட்டு உரிமையாளரை கொன்றதாக ஆடவர் மீது குற்றச் சாட்டு !

Share:

இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது வாடகை வீட்டின் உரிமையாளரான முதியவரைக் கொன்றதாக ஆடவர் ஒருவர் செலாயாங் மஜிஸ்ட்ரெட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்தக் கொலை வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 22 வயது முஹமாட் அமிருல் அர்ஷாட் சைனுடின் இடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

மஜிஸ்ட்ரெட் சாய் குவான் ஹொக் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டு தமக்குப் புரிந்ததாகக் குறிப்பிடும் வகையில் முஹமாட் அமிருல் அர்ஷாட் சைனுடின் தனது தலையை ஆட்டினார்.

வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டின்படி, ஹொங் கீ யிங் எனும் 70 வயது வீட்டு உரிமையாளரை கோம்பாக் அருகே தாமான் எஹ்சான், ஜாலான் E4/1 இல் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கும் நவம்பர் 23 ஆம் தேதி இரவு 9.50 மணிக்குள் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

தடயவியல், வேதியியல், உடற்கூறாய்வு அறிக்கைகள் அனைத்தும் முழுதாய் கிடைக்கக் காத்திருக்க வேண்டிய சூழலில், எதிர்வரும் சபசரி 16 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் செவிமெடுப்புக்கு வருகிறது.

வீட்டு வாடகை குறித்து திருப்தி இல்லாததே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்